கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

கும்பகோணம் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்;

Update: 2022-02-10 10:00 GMT

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார் 

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே,  கும்பகோணம் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியபோது:

கும்பகோணத்தில் விரைவில் மருத்துவ கல்லூரி துவங்கப்படும், தேர்தலின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் தமிழக முதல்வர் ஸ்டாலின்  நிறைவேற்றி வருகின்றார். பெட்ரோல் டீசல் ஆவின் பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலையை குறைத்து வாக்குறுதி அளித்தவாறு நிறைவேற்றி வருகிறார். ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

எம்பி மற்றும் எம்எல்ஏ தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தீர்கள். அதேபோல் இத்தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை தருவீர்கள் என நம்புகிறேன். திமுக மக்களாட்சி அதிமுக ஆட்சி போல் அடிமை ஆட்சி அல்ல என பேசினார்.

Tags:    

Similar News