கும்பகோணம் நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் உதய கருட சேவை

108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் ஒன்றாக நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் உதய கருட சேவை நடந்தது

Update: 2022-02-02 07:30 GMT

 கும்பகோணம் அருகே நாதன்கோவில் கிராமத்தில் உள்ள ஜெகநாதபெருமாள் கோவில்

108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் ஒன்றாக கும்பகோணம் அருகே நாதன்கோவில் கிராமத்தில் உள்ள ஜெகநாதபெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் செண்பகவல்லி தாயாருடன் அருள்பாலித்து வருகிறார். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை நாளில் உதய கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தை அமாவாசையை முன்னிட்டு உதய கருடசேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி ஜெகநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கருட சேவை உற்சவத்தையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து கோபூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து சாமி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News