கும்பகோணத்தில் கோயில் உண்டியலில் பணம் திடிய வாட்ச் மேன் இருவர் கைது
கும்பகோணத்தில் கோயில் உண்டியலில் பணத்தை திருடிய கோயில் வாட்ச் மேன்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் நகரில் உள்ள முக்கிய வைணவத் தலங்களில் ஒன்றானது சக்கரபாணி சுவாமி கோவிலில் இரவு காவலர்களாக தினகரன் மற்றும் சக்கரராஜா ஆகிய இருவர் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு இரவு பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் நீண்ட குச்சியில் பசை தடவி உண்டியலுக்குள் செலுத்தி பணத்தை திருடும் காட்சி அங்கு வைத்துள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இதனை கவனித்த கோவில் செயல் அலுவலர் மல்லிகா கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சக்கரராஜா மற்றும் தினகரன் ஆகிய இரு இரவு காவலர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இவர்கள் பணத்தை திருடும் வீடியோ காட்சிகளை காண்பித்து விசாரித்ததில் இருவரும் பணத்தை திருடியதை ஒத்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவிலின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய இரவு காவலர்களே கோவில் உண்டியலில் உள்ள பணத்தை திருடியது கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.