பாலியல் வன்முறைக்கு எதிரான திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி பட்டறை
பாலியல் வன்முறைக்கு எதிராக திறம்பட செயல்படுவது தொடர்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு பயிற்சி பட்டறை;
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை மேல்நிலைப்பள்ளியில் பாலியல் வன்முறைக்கு எதிராக செயல்படுவதற்கான குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்செல்வி வரவேற்றார். மாவட்ட மைத்ரி திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழரசன் அறிமுக உரையாற்றினார். அதேகொம் பின்னகம் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ நோக்க உரையாற்றினார். ரோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் பெருமாள் தலைமை உரையாற்றினார். கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி சிறப்புரையாற்றினார்.
ஹீல் டிரஸ்ட் மெர்ஸி இயக்குனர் வளரிளம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விளக்கமளித்தார். கும்பகோணம் சர்வேயர் சக்திவேல், வட்ட சட்ட பணிகள் குழு வழக்கறிஞர் சசிகலா, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் அழகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியை லதா நன்றி கூறினார்.