வலையப்பேட்டையில் பாரம்பரிய நெல் சாகுபடி பற்றிய தொழில்நுட்ப பயிற்சி

வலையப்பேட்டையில் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி பற்றிய தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது

Update: 2021-07-04 05:19 GMT

கும்பகோணம் அருகே வலையப்பேட்டையில் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி பற்றிய தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலெட்சுமி தலைமை வகித்து, வேளாண்மை துறையின் திட்டங்கள் குறித்து பேசினார்.

காலநிலை மாற்றம், பருவகால மாற்றத்திற்கேற்ப பாரம்பரிய நெல் தேர்வு செய்தல், விதை நேர்த்தி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் பவுண்டேஷன் வளர்ச்சி அலுவலர் சுதாகர் கூறினார்.

மேலும் அறுவடைக்கு பிந்தைய மதிப்பு கூட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் பாரம்பரிய நெல் சந்தைபடுத்தும் முறைகள், நெல்லில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.

உதவி வேளாண்மை அலுவலர் மணவாளன், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் தனசேகரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். முகாமில் 40 விவசாயிகள் தொழில்நுட்ப பயிற்சி பெற்றனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் மாதலெட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News