கும்பகோணம் மாநகராட்சியுடன் சுவாமிமலை பேரூராட்சி இணைக்க வர்த்தகர்கள் எதிர்ப்பு
சுவாமிமலை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
கும்பகோணம் மாநகராட்சியுடன் சுவாமிமலை பேரூராட்சியை இணைக்க வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கும்பகோணம் மாநகராட்சியுடன் சுவாமிமலை பேரூராட்சியை இணைக்க கூடாது என சுவாமிமலை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். சுவாமிமலை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் சுவாமிமலையில் சங்க தலைவர் என் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தனித் தன்மையுடன் செயல்படும் சுவாமிமலை பேரூராட்சியை, கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்க இருக்கும் முடிவை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, தொடர்ந்து சுவாமிமலை பேரூராட்சியாக செயல்பட அனுமதிக்கவேண்டும். சுவாமிமலை பேரூராட்சி தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்கவனத்தை ஈர்க்கும் வகையில், சுவாமிமலையில் அடையாள கடையடைப்பு நடத்துவது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சுவாமிமலையில் 29.8.2021 -அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் சங்க செயலாளர் ஆர்.ராஜா மற்றும் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.