மஹாளய அமாவாசையையாெட்டி தஞ்சை வழியாக சுற்றுலா சிறப்பு ரயில்

புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை ஒட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு ஆன்மிக சுற்றுலா ரயில் முதன் முறையாக தஞ்சை வழியாக இயக்கம்.

Update: 2021-09-11 13:46 GMT

புரட்டாசி மாத மஹாளய அமாவாசையையாெட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு ஆன்மிக சுற்றுலா ரயில் முதன் முறையாக தஞ்சை வழியாக இயக்கப்படுவதாக தஞ்சை மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இச்சங்க செயலாளர் கிரி வெளியிட்டுள்ள அறிக்கை: மஹாளய அமாவாசையை ஒட்டி கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக ஆன்மீக சுற்றுலா சிறப்பு ரயிலலை மத்திய அரசு நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி இயக்க உள்ளது. பாரத் தர்சன் அடிப்படையில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் மதுரையில் இருந்து வரும் 30ம் தேதி புறப்பட்டு அலகாபாத் பிரயாக், அயோத்தியா, காசி, கயா, கொல்கத்தா, கனகதுர்கா ஆகிய இடங்களுக்கு சுற்றுலாவாக செல்கிறது.

12 நாட்களில் நிறைவடையும் இந்த சுற்றுலா ரயில் கட்டணம், உணவு, தங்கும் வசதி, சுற்றுலா தலங்களுக்கு சென்று வர வாகன வசதி உட்பட அனைத்திற்கும் சேர்த்து கட்டணம் ஒரு நபருக்கு ரூ.11 ஆயிரத்து 340 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக பாரத் தர்சன் சுற்றுலா சிறப்பு ரயில் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக செல்கிறது. இதனால் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் இந்த சிறப்பு ரயிலில் போகும்போது பயணிகள் ஏறவும் திரும்ப வரும்போது இறங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி நிறுவன மதுரை கிளையை அணுகவும். இந்த சுற்றுலா சிறப்பு ரயிலை தஞ்சை மாவட்ட பயணிகள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டுமென அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News