திருபுவனம் சோழன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க சிறப்பு கூட்டம்
திருபுவனம் சோழன் பட்டுக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.;
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் சோழன் பட்டுக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் தலைவர் சிங். செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேலாண் இயக்குநர், துணை தலைவர், இயக்குநர்கள், சங்க அங்கத்தினர்கள், சங்க மேலாளர் மற்றும் சிப்பந்திகள் கலந்து கொண்டனர். திருபுவனம் சோழன் பட்டுக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் விற்பனை ஆண்டிற்கு ரூ.10.00 கோடி விற்பனை இலக்காக கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.