செவிலியர்களுக்கு தொற்று உறுதியானதால் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை மூடல்
பணியிலிருந்த செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை மூடப்பட்டது.;
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 38,057 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த 4 செவிலியர்கள், ஒரு லேப் டெக்னீசியன் உள்ளிட்ட 5 பேருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அரசு மருத்துவமனை மூடப்பட்டது.
இதனை தொடர்ந்து மருத்தவமனை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது