பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

கும்பகோணம் அருகே தாராசுரத்தை சேர்ந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.;

Update: 2021-08-02 10:14 GMT

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த ஜோடிகள்.

கும்பகோணம் அருகே தாராசுரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகள் திவ்யா (26). தாராசுரம் அருகே சோழன்மாளிகையில் வசிப்பவர் குணசேகரன் (28). மஸ்கட் நாட்டில் வேலை பார்க்கிறார். இவர்களது இருவரின் குடும்பத்தினரும் நட்பு ரீதியாக பழகி வருகின்றனர்.

அதனடிப்படையில் குணசேகரனுக்கும், திவ்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதலர்கள் வீட்டின் அருகே உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் போலீசார் விசாரித்து மாப்பிள்ளை வீட்டாரிடம் திவ்யாவை அனுப்பி வைத்தனர்.



Tags:    

Similar News