தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் பேரூராட்சி சாதாரண கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது.;

Update: 2022-03-18 11:45 GMT

திருநாகேஸ்வரம் பேரூராட்சி முதல் கூட்டம் அதன் தலைவர் ஜோதி தலைமையில் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜோதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். கூட்டத்தில் 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்திய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவித்தல் உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் துணைத்தலைவர் உதயா, உறுப்பினர்கள் சுந்தரமூர்த்தி, ஜாஸ்மின் பர்வீன், அபிராமி, மாலா, தீபா, கீதா, செந்தாமரை, தமிழ்மணி, காமராஜ், பரமேஸ்வரி, சங்கீதா, பாலச்சந்திரன், புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News