விவசாயிகளுக்கு பண்ணை கழிவு மேலாண்மை தொழில் நுட்ப பயிற்சி
திருப்புறம்பியத்தில் வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு பண்ணை கழிவு மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி;
கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு பண்ணை கழிவு மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது. அட்மா திட்டத்தின் கீழ் நடந்த இம்முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலட்சுமி தலைமை வகித்து நடப்பு திட்டத்தில் உள்ள குறுவை பருவ சாகுபடிக்கான மானிய விலையில் விதை மற்றும் நுண்ணீர் பாசனம் செயல்பாடுகள் பற்றி கூறினார்.
வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி) பாலசரஸ்வதி முன்னிலை வகித்து பேசினார். எம்.எஸ்.சுவாமிநாதன் பவுண்டேஷன் வளர்ச்சி இயக்குனர் சுதாகர் பண்ணை கழிவு மேலாண்மை பற்றி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ரவிக்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் தனசேகரன் ஆகியோர் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் மாதாலட்சுமி நன்றி கூறினார்.