தஞ்சை மருத்துவமனைக்கு ரூ 1 கோடியில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி அரசு கொறடா வழங்கல்
தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ரூ 1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை சிட்டியூனியன் வங்கி சார்பில் தலைமை அரசு கொறடா கோவை செழியன் வழங்கினார்.;
கும்பகோணத்தில் உள்ள சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ. 1 கோடி மதிப்பிலான 100 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோரிடம் வழங்கினார்.
அப்போது தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியனிடம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து உடனடியாக 20 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கூடுதலாக கும்பகோணம் மருத்துவமனையில் பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கோவி செழியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது.
தமிழக முதல்வர் ஆக்சிஜன் கிடைப்பதற்காக உலகளாவிய டெண்டர் கோரி இருப்பது அனைத்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் எந்த தட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்கும். அன்றாட வாழ்வு பாதிக்கப்படாத சூழ்நிலையில் தமிழக அரசு உரிய முடிவை எடுக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.