கும்பகோணத்தில் தமிழக நாயுடு கூட்டமைப்பினர் யுகாதி பண்டிகை கொண்டாட்டம்
கும்பகோணத்தில் தமிழக நாயுடு கூட்டமைப்பு சார்பில் யுகாதி பண்டிகை விழா கொண்டாடப்பட்டது.;
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி பண்டிகையை முன்னிட்டு தமிழக நாயுடு கூட்டமைப்பு தலைவர் ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் ரங்கராஜ், மாநில நிர்வாக குழு உறுப்பினரும் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் தமிழக நாயுடு கூட்டமைப்பின் களப்பணியினர் இணைந்து யுகாதி நிகழ்ச்சி நிரல் நடத்தினர்.
அதில், பெண்களுக்கான கோலப்போட்டி, சிறுவர்களுக்கு தண்ணீர் பாட்டிலில் நிரப்புதல், ஓவியப்போட்டி, பரத நாட்டியம், ஆடல் பாடல் நிகழ்ச்சி, பெரியவர்களுக்கு லக்கி பாக்ஸ் மியூசிகல் சேர் மற்றும் திருமணம் ஆகாத ஆண் பெண் இரு பாலருக்கும் ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சியும் நடை பெற்றது.