தாராசுரத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் நடைபெற்றது.;
தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னால் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, புதுக்கோட்டை ராசு ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் இரா.முத்தரசன் தற்கால அரசியல் நிகழ்வுகளை விளக்கி பேசினார். சங்க பொதுச்செயலாளர் பெரியசாமி வேலை அறிக்கையை அறிமுகப்படுத்தி பேசினார். சங்க மாவட்ட செயலாளர் இராமச்சந்திரன் உள்ளிட்ட மாநிலக்குழு நிர்வாகிகள் நாட்டின் பல்வேறு நிகழ்வுகளை விவாதித்தனர்.
இதனை தொடர்ந்து இரா. முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் முன் மொழிந்த தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது. இந்த தீர்மானங்களை ஆதரிக்காமல் பாரதீய ஜனதா கட்சி வெளிநடப்பு செய்தது ஆச்சர்யமாக உள்ளது. பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு கட்சியினரும் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறார்கள். கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தொழிலாளர்களின் வாழ்க்கை பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய கோலப்பன் தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப்பு கமிட்டி அ.தி.மு.க ஆட்சியில் கலைக்கப்பட்டது. அதை தற்போது அரசு மீண்டும் அந்த வாரியத்தை அமைக்க வேண்டும்.
கோவில் மனையில் குடியிருப்பவர்களுக்கு சதுர அடி அளவில் வாடகை நிர்ணயம் செய்வதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் 100 நாட்கள் என்பதை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். மேலும் கூலி நாள் ஒன்றுக்கு ரூ.600 உயர்த்த கோரிக்கை வைக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார சம்மேளத்தின் நடைபெறவுள்ள காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து பங்கேற்கும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.
இதனை தொடரந்து வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், விவசாய நலச் சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தியும், விவசாயத்ததொழிலாளர்களின் பிரச்சனைகளை ஆய்வு உயர்மட்ட குழு அமைக்க கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.