சுவாமிமலையில் திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி

கும்பகோணம் அருகே சுவாமிமலையில், சித்திரை மாத தேர் திருவிழாவை முன்னிட்டு வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2022-04-07 00:45 GMT

சித்திரை மாத தேர் திருவிழாவை முன்னிட்டு, சுவாமிமலை ஸ்வாமிநாதர் ஆலயத்தில், புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. 

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள, புகழ்பெற்ற சுவாமிமலையில்,  ஸ்ரீ சுவாமிநாத சுவாமி திருக்கோவில் சித்திரை மாத தேர் திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதை முன்னிட்டு புதியதாக தேர்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழைய தேர் முற்றிலும் சேதம் அடைந்த காரணத்தினால்,  கடந்த ஒரு வருட காலமாக சுமார் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்,  23 டன் எடையுடைய 13 1/4 அகலம் 13 1/4 உயரம் கொண்ட புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது. சித்திரை மாத தேர் திருவிழாவை முன்னிட்டு வெள்ளோட்ட நிகழ்ச்சி, நேற்று திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு வீதிகள் வழியாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

Tags:    

Similar News