சுவாமிமலை பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி
சுவாமிமலை பேரூராட்சி நியமனக் குழு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.;
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை பேரூராட்சியில் நியமனக் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல், தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா தலைமையில் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் குணாளன் என்பவரும், அ.தி.மு.க. சார்பில் திவ்யா என்பவரும் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திவ்யா 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற திவ்யாவுக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செந்தில், சுவாமிமலை பேரூர் செயலாளர் ரெங்கராஜன் மற்றும் பேரூராட்சி துணை தலைவர் சங்கர் மற்றும் அ.தி.மு.க. பேரூராட்சி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.