தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிலம்பம் சுற்றி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையடுத்து கும்பகோணம் பகுதி முழுவதும் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி இன்று கும்பகோணம் அசூர் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் மத்தியில் சிலம்பம் சுற்றி அசத்தினார். இதை பார்த்த அப்பகுதி பொது மக்கள் கைதட்டி, விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.பிரச்சாரத்தின் போது அதிமுக, பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.