சுவாமிமலை அருகே ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் பயன்பெற ஏழு கிராமங்கள் தேர்வு
சுவாமிமலை அருகே ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் பயன்பெற ஏழு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன;
கும்பகோணம் வட்டாரத்தில் 2021- 2022 -ஆம் ஆண்டின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயன்பெற புத்தூர், சேங்கனூர், கல்லூர், நாகக்குடி, ஆரியப்படைவீடு, உத்தமதானி, அகராத்தூர் ஆகிய ஏழு கிராமங்களை சேர்ந்த 50 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு வேளாண் துறை, கால்நடைத் துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் 45 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். மேற்கண்ட திட்டத்தின்கீழ் கால்நடைகள் கொள்முதல் செய்யும் பொருட்டு மீன் சுருட்டி கால்நடைச் சந்தையில் தரமான மாடுகள், ஆடுகள் வாங்கப்பட்டன. பின்னர் அதன் காதுகளில் அடையாள வில்லை பொருத்தப்பட்டது. மேற்கண்ட கொள்முதல் சோழபுரம் கால்நடை மருத்துவ உதவி மருத்துவர் முருகானந்தம், கும்பகோணம் வேளான்உதவி இயக்குனர் விஜயலட்சுமி, வேளாண் துணை அலுவலர் சாரதி ஆகியோர் முன்னிலையில் கால்நடைகள் வாங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கிராமப்புற பயிற்சிக்காக வருகை தந்துள்ள தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர்கள் கலைவாணன், மணவாளன், அலெக்சாண்டர், கீர்த்திகா, மற்றும் அட்மா திட்ட தனசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.