மக்கள் தலைவர் சங்கரய்யா நூறாவது பிறந்த தின விழா:அனைத்து கட்சியினர் பங்கேற்பு

கும்பகோணத்தில் மக்கள் தலைவர் தோழர் சங்கரய்யா நூறாவது பிறந்த தின விழாவில் அனைத்து கட்சியினர் பங்கேற்பு.

Update: 2021-07-15 08:13 GMT

சங்கரய்யா பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டி கொண்டாடிய அனைத்து கட்சியினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சுதந்திரப் போராட்ட வீரரும் மக்கள் உரிமைக்காக போராடிய தோழர் என். சங்கரய்யா 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பிறந்தநாள் கேக் வெட்டி, இனிப்பு வழங்கியும், சங்கரய்யா வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தக வெளியீடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன் வரவேற்புரையாற்றினார். மயிலாடுதுறை  எம்பி ராமலிங்கம், தமிழக தலைமை கொறடா கோவி. செழியன், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், திமுக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, திமுக நகர செயலாளர் சுப.தமிழழகன், விசிக மண்டல செயலாளர் விவேகானந்தன், விசிக மாவட்ட பொறுப்பாளர் உறவழகன், மதிமுக மாவட்ட செயலாளர் முருகன், திக மாவட்ட தலைவர் நிம்மதி உள்ளிட்டஅனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News