இறந்த பெண்ணிண் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதை கண்டித்து சாலை மறியல்

கும்பகோணத்தில் மாரடைப்பால் இறந்த பெண்ணிண் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்.;

Update: 2021-07-22 17:36 GMT

மாரடைப்பால் இறந்த பெண்ணிண் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததை கண்டித்து பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் கொரநாட்டுக் கருப்பூர் அமிர்தபுரத்தை சேர்ந்தவர் அருளப்பன். தச்சு வேலை செய்பவர். இவரது மனைவி அருட்செல்வி ( 38). நேற்று காலை அருட்செல்விக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அருள்செல்வியை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சில நிமிடங்களில் அருட்செல்வி மாரடைப்பில் இறந்ததாக தெரிகிறது.

இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த கும்பகோணம் கிழக்கு போலீசார் அருள் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு சென்று வைத்துள்ளனர். இந்நிலையில் மாரடைப்பால் இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்ட போலீஸ் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து கும்பகோணம் அரசு மருத்துவமனை முன்பு விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் தலைமையில் அருள்செல்வியின் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

Tags:    

Similar News