பருத்திச்சேரி கிராமத்தில் மரப்பாலம் - கான்கிரீட் பாலம் அமைக்க கோரிக்கை
பருத்திச்சேரி கிராம மக்கள் வேறுவழியின்றி மரப்பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனர்;
திருவிடைமருதூர் ஒன்றியம் பருத்திச்சேரி கிராமத்தில் சேதமடைந்த மரப்பாலம்
கும்பகோணம் பகுதி திருவிடைமருதூர் ஒன்றியம் பருத்திச்சேரி கிராமத்தில் மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ-மாணவிகள் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.
இத்தகைய போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த மரப்பாலம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக சேதமடைந்த மரப்பாலம் எப்போது வேண்டுமானாலும் ஆற்றுக்குள் விழுந்து விடும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையிலும் பருத்திச்சேரி கிராம மக்கள் வேறுவழியின்றி மரப்பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சேதமடைந்த மரப்பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக கான்கிரீட் பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.