ஆவணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை

கும்பகோணம் அருகே ஆவணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Update: 2022-05-03 05:30 GMT

கும்பகோணம் அருகே ஆவணியபுரத்தில் ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது.

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கூறப்பட்ட ரமலான் மாதம் நோன்பு வைத்தல் அதில் ஒன்றாகும். நேற்றிரவு பிறை தென்பட்டதை அடுத்து 30 நாள் நோன்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு கும்பகோணம் அருகே ஆவணியபுரம் தவ்ஹீத் ஈத்கா திடலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகை மற்றும் பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ராஜ் முஹம்மது, மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஏராளமான பெண்கள், சிறுவர், சிறுமியர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். தொழுகைக்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

Tags:    

Similar News