கும்பகோணம் கலைக்கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு நீர் மேலாண்மை கருத்தரங்கம்
கும்பகோணம் கலைக்கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு நீர் மேலாண்மை கருத்தரங்கம்
கும்பகோணம் கலைக்கல்லூரியில் தஞ்சை மாவட்ட அளவிலான இந்திய அரசு நேருயுவகேந்திரா தஞ்சாவூர் சார்பில் விவேகானந்தா கலாம் யூத் கிளப் ஒருங்கிணைப்பில் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து மழைநீர் சேகரிப்பு நீர் மேலாண்மை கருத்தரங்கம் நடைபெற்றது.
அரசு கலைக்கல்லூரி முதல்வர் துரையரசன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கை, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் தொடக்கி வைத்து விழிப்புணர்வு பிரதிகள் மற்றும் புத்தகம் வெளியிட்டனர்.
கருத்தரங்கின் நோக்கம் குறித்துநேருயுவகேந்திரா துணை இயக்குநர் திருநீலகண்டன் விளக்கிப் பேசினார்.. விவேகானந்தா கலாம் யூத் கிளப் தலைவர் கணேசன் வரவேற்றார். பேராசிரியர் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். விழாவில் பெரியார் பல்கலைகழகத்தின் ஆட்சி மன்ற உறுப்பினர் ஆதலையூர் சூரியகுமார் கருத்துரை வழங்கினார்.பேராசிரியர் மீனாட்சி சுந்தரம், ரெட்கிராஸ் துணைத்தலைவர் ரோசரியோ வாழ்த்திப் பேசினார்கள்.
அரசு கலைக்கல்லூரிநாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் பேராசிரியர் சத்யா, சுவாமிநாதன், லதா விழாவை ஒருங்கிணைப்பு செய்தார்கள். என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் முருகன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் அருள் நன்றி கூறினார்.