திருட்டு சம்பவங்களை தடுக்க சுந்தரபெருமாள் கோவிலில் சி.சி.டி.வி. கேமரா

திருட்டு சம்பவங்களை தடுக்க சுந்தரபெருமாள் கோவில் பகுதியில் சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-12-20 13:30 GMT

சுந்தர பெருமாள் கோவில் குடியிருப்பு பகுதியில் போலீசாரால்  சி.சி.டி.வி. கேமரா  தொடங்கி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே சுந்தரபெருமாள் கோவில் கரிகாற்சோழன் நகர் பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் திருட்டு நடவடிக்கைகளை கண்காணிக்க உடனடியாக இந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும் என காவல்துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரின் தீவிர முயற்சியால் புதிதாக சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்பட்டது.

இதற்கான துவக்கவிழா சுந்தரபெருமாள் கோவில் கரிகாற்சோழன் நகரில் நடைபெற்றது. விழாவிற்கு கும்பகோணம் ஒன்றிய குழு தலைவர் காயத்ரி அசோக்குமார் தலைமை வகித்தார். நகர் நல சங்க தலைவர் நாகநாதன் வரவேற்று பேசினார். கும்பகோணம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் கலந்து கொண்டு புதிய சி.சி.டி.வி. கேமராவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவர் சேதுராமன், ஒன்றிய குழு உறுப்பினர் அன்பழகன் உள்பட நகர் நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நகர் நல சங்க செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News