ஸ்டாலின் அரசு செயல்பாடு எப்படி? கும்பகோணத்தில் பிரேமலதா பேட்டி

திமுக அரசின் செயல்பாடுகள் ஏமாற்றமளிப்பதாக, கும்பகோணத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Update: 2022-02-11 08:00 GMT

கும்பகோணத்தில் தேமுதிக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த். 

கும்பகோணத்தில் தேமுதிக பிரமுகர் அழகர் - சாந்தி மகள் அபிநயா - பிரசாந்த் திருமணத்தை, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நடத்தி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நீட் தேர்வு விவகாரத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது. திமுக அரசின் செயல்பாடுகள் கடந்த 9 மாதங்களில் மஞ்சள் பை, மாற்று திறனாளிகள் சென்னை கடற்கரை வரை செல்ல வசதி என ஒரு சில நல்ல விஷயங்கள் செய்திருந்த போதும்,  கொடுத்த வாக்குறுதிகளை குறிப்பாக பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம், மற்றும் பொங்கல் பரிசு தொகை வழங்காதது, வழங்கிய பொருட்களும் தரம் இல்லாமல் இருந்ததும் பெண்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

பள்ளிக்கூடங்களில் மதங்கள் கூடாது, மாணவர்களிடையே பாகுபாடு கூடாது என்பதற்காகத்தான் பள்ளிச் சீருடையை அறிமுகம் செய்யப்பட்டது. மாநில உரிமைகளை பறிக்க மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. அதுபோலவே தமிழகம் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட போதும் மத்திய அரசு நிவாரணம் வழங்காதும் கண்டனத்திற்குரியது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக எவ்வளவு இடங்களில் வெற்றி பெறும் என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியவரும் என்றார்.

Tags:    

Similar News