தடுப்பூசி செலுத்தும் செவிலியர்களிடம் அட்டகாசம் செய்த குடிமகன்
கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் செவிலியர்களிடம் அட்டகாசம் செய்த குடிமகனில் வீடியோ வைரலாகி வருகிறது
தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்ற தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி வார இறுதி நாளில் மெகா தடுப்பூசி முகாம்களை அமைத்து லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தடுப்பு ஊசி செலுத்தாதவர்களை வீடு வீடாக கண்டறிந்து தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
கும்பகோணத்தில் செவிலியர்கள் வீதி வீதியாக முகாமிட்டு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதன்படி கும்பகோணம் செக்கடி தெருவில் தடுப்பூசி செலுத்த வந்த செவிலியரிடம் அங்கு வந்த குடிமகன் சலம்பலில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்பட்டது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதேபோல் தெருக்களில் அமைக்கப்படும் தடுப்பூசி முகாம்களில் குடிமகன்கள் வந்து தடுப்பூசி செலுத்த வற்புறுத்துவதும், வேறு இடத்திற்கு சென்று முகாம் நடத்துமாறு தகராறு செய்வதால் செவிலியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி முகாம்களில் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுத்தபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.