சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் வரும் 27-ஆம் தேதி மின் நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 27-ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு.;
மாதிரி படம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்குதலும் பராமரித்தலும் கும்பகோணம் நகர உதவி செயற்பொறியாளர் மகாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 27-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கும்பகோணம் நகரம் தவிர தாராசுரம்,எலுமிச்சங்காபாளையம், அண்ணலக்ரஹாரம், திப்பிராஜபுரம், அரியத்திடல், சிவபுரம், உடையாளூர், சுந்தரபெருமாள் கோயில் , பண்டாரவாடை, நாச்சியார்கோயில், திருநாகேசுவரம், பட்டீசுவரம், வலங்கைமான், ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 27-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.