ஆரியபடை வீடு ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
ஆரியபடை வீடு ஊராட்சியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
கும்பகோணம் ஒன்றியம் ஆரியபடை வீடு ஊராட்சியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் முத்துச்செல்வம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார் ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் செல்வராஜ், ஒன்றிய பொறுப்பு உறுப்பினர் இளங்கோ, கூட்டுறவு சங்க தலைவர் மணிவாசகம், ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணம், தஞ்சை வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகநாதன், ஊராட்சி கிளை செயலாளர்கள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.