கும்பகோணத்தில் பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் விழா

கும்பகோணம் தெற்கு ஒன்றியம் சாக்கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் பாஜக கட்சி சார்பில் நம்ம ஊர் பொங்கல் விழா நடந்தது;

Update: 2022-01-13 15:15 GMT

கும்பகோணம் தெற்கு ஒன்றியம் சாக்கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த  நம்ம ஊர் பொங்கல் விழா

கும்பகோணம் தெற்கு ஒன்றியம் சாக்கோட்டை மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் சாக்கோட்டை சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நாராயணி நிதி லிமிடெட் நிறுவனர் கார்த்திகேயன், வர்த்தகப் பிரிவு மாநில செயலாளர் கராத்தே ராஜா, மாவட்ட துணைத்தலைவர் சோழா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பசும்பொன் பாண்டியன், மாவட்ட துணைத் தலைவி சுதந்திராதேவி, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், மகளிர் அணி மாவட்ட தலைவி சுனிதா மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கும்பகோணம் தெற்கு ஒன்றிய தலைவர் சரவணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News