பிரதமரின் திட்டத்தில் அரசியல் தலையீடா? -கும்பகோணத்தில் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-11-29 14:45 GMT

பிரதமரின் அனைவருக்கும் வீடு என்ற திட்டமானது தகுதியுள்ளவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதனை வலியுறுத்தி கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடிசை மாற்று வாரியத்தில் அரசியல் தலையீடு நடைபெறுவதை கண்டித்து,  கும்பகோணம் மாநகரத்தில் பாரதிய ஜனதா கட்சி தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் சாக்கோட்டை சதீஷ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய  அணி பிரிவு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News