சுவாமிமலை பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளருக்கு போலீஸ் பாதுகாப்பு

கும்பகோணம் அருகே, சுவாமிமலை பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-02-25 05:30 GMT

போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள சுயேச்சை வேட்பாளரின் வீடு.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, சுவாமிமலை பேரூராட்சியில்,  நான்காவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்,  சுயேச்சை வேட்பாளர் கௌசல்யா. இவருக்கு, தேர்தல் முடிவு வெளிவந்த நாள் முதல் இன்று வரை,  அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுவாமிமலையில் பேரூராட்சி தலைவர் பதவி குறித்து அதிமுக, திமுக போட்டி நிலவி வரும் காரணத்தால், சுயேச்சை ஆதரவு தேவைப்படும் சூழலில்,  இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News