கும்பகோணம் அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு போலீசார் இலவச முக கவசம்
முக கவசம் அணியாதவர்களுக்கு இலவச முக கவசம்;
தமிழகத்தில் கொரோனா தொற்று 3வது அலை பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாச்சியார்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் ரேகாராணி தலைமையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், மற்றும் ரவி, காவலர்கள், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இலவசமாக முகக் கவசங்களை வழங்கினார்கள்.