கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-21 23:30 GMT

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ லதா தலைமையில் நடந்தது. 

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்,  தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ லதா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நல சங்கத் தலைவர் சுகுமார், செயலாளர் சேகர் மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சாமிநாதன், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்கம் மேலாளர் இளங்கோவன் மற்றும்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில்,  தனியார் நிறுவனங்களில் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கி வரும் உதவித்தொகை 10ம் தேதிக்குள் வழங்க வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சர்க்கரை நாற்காலி வைத்திட வேண்டும், வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களிலும் அரசு ஆணைப்படி எண்ணிக்கை உச்சவரம்பின்றி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும், பஸ்களில் பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள் தங்களது வியாபார பொருட்கள் எடுத்து செல்லும் லக்கேஜ் பைகளுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், மாற்றுத்திறனாளிக்கு இயற்கை மரணத்திற்கு முன் கூட்டியே முன் பணமாக ரூ. 2 ஆயிரம்  வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  கோரிக்கை மனுவை ஆர்டிஓ லதாவிடம் வழங்கினர்.

Tags:    

Similar News