சுவாமிமலை அருகே இடத்தகராறில் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

சுவாமிமலை அருகே இடத்தகராறில் எல்லை வரையறுத்தல் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு. மூன்று பேர் கைது;

Update: 2021-07-16 03:59 GMT

சுவாமிமலை அருகே இன்னம்பூர் மெயின் ரோட்டை சேர்ந்த மாரிமுத்து மகன் மகேந்திரன் ( 51) இன்னம்பூர் புதுத் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் மகன் செல்வம் (40) இருவருக்குமிடையே இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் பிரச்சினைக்குரிய இடத்தில் மகேந்திரன் வேலி கட்டி விட்டு தன் வீட்டிற்கு சென்ற போது அங்கு மறைந்திருந்த செல்வம், ஜெயராமன், லட்சுமணன், மற்றும் பெயர் தெரியாத இருவர் மகேந்திரனை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் படுகாயமடைந்த மகேந்திரன் கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வழக்கில் சிகிச்சை பெற்று வரும் மகேந்திரனுக்கு ஆதரவாக அவரது உறவினர்களான இன்னம்பூரை சேர்ந்த ஆனந்தராஜ் (27), தினேஷ், செந்தில், ஹரிஷ், மற்றும் சசிதரன் ஆகியோர் புளியஞ்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த செல்வத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டி, கம்பியால் தாக்கி உள்ளனர்.  இதில் படுகாயம் அடைந்த செல்வம்.அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வழக்கில் மகேந்திரன் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொடுத்த தனித்தனி புகார்களில் இருவர் மீதும் வழக்கு பதிந்த சுவாமிமலை போலீசார் செல்வத்தை தாக்கிய செந்தில், ஹரிஷ், ஆனந்த்தராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் மகேந்திரனை தாக்கிய ஜெயராமன் மற்றும் லட்சுமணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News