சுவாமிமலையில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

சுவாமிமலையில் வருவாய்த்துறையினர் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.;

Update: 2021-12-08 13:45 GMT

சுவாமிமலையில் வருவாய்த்துறையினர் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் சர்வேயர் சர்மிளா பேகம் தலைமையில் நடைபெற்றது.

சுவாமிமலையில் வருவாய்த்துறையினர் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் சர்வேயர் சர்மிளா பேகம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிராம நிர்வாக அலுவலர் ரவி, சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை, சுவாமிமலை பேரூர் கழக திமுக செயலாளர் எஸ்எம்எஸ். பாலசுப்ரமணியன், கிராம உதவியாளர் சீனிவாசன், திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர் குணாளன், மாவட்ட பிரதிநிதிகள் கேசவன், இக்பால், பேரூர் திமுக இளைஞரணி அமைப்பாளர் ராஜா, பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் கோபால், வட்டச் செயலாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல் ஆகிய சேவைகளுக்கான வருவாய் துறையிடம் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.

Tags:    

Similar News