கபிஸ்தலம் அருகே பட்டா திருத்தல் சிறப்பு முகாம்

கபிஸ்தலம் அருகே உள்ள தியாக சமுத்திரம் கிராமத்தில் பட்டா திருத்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.;

Update: 2021-12-09 14:00 GMT

தியாக சமுத்திரம் கிராமத்தில் தமிழக அரசின் பட்டா திருத்தல் சிறப்பு முகாம் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

கபிஸ்தலம் அருகே உள்ள தியாக சமுத்திரம் கிராமத்தில் தமிழக அரசின் பட்டா திருத்தல் சிறப்பு முகாம் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் சுகுணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் குருநாதன் வரவேற்று பேசினார். முகாமில் தியாக சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களிடம் பட்டா திருத்துவது தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு பெறப்பட்ட மனுக்களில் ஒருசில மனுக்களுக்கு உடன் தீர்வும் காணப்பட்டது. மற்ற மனுக்கள் விரைவில் தீர்வு காணப்படும் என வட்ட வழங்கல் அலுவலர் கூறினார்.

இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான தாமரைச்செல்வன், பாபநாசம் ஒன்றிய குழு துணைத் தலைவர் பழனிசாமி, திருமண்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், திமுக நிர்வாகிகள் தியாகசமுத்திரம் செந்தில், ராமானுஜபுரம் ஜெகநாதன், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவப்பிரகாசம், திவ்யா, தேவி மற்றும் கிராம உதவியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News