பாபநாசம் பகுதியில் 74 அர்ச்சகர்களுக்கு காெரோனோ நிவாரணம் : அறநிலையத்துறை வழங்கல்

தஞ்சாவூர் அருகே பாபநாசத்தில் 74 அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரணத்தை இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வழங்கப்பட்டது.;

Update: 2021-06-21 13:42 GMT

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் 74 அர்ச்சகர்களுக்கு  கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு , உதவி ஆணையர் சிவராம் குமார் ஆகியோர் அறிவுரையின்படி பாபநாசம் தங்க முத்துமாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் அர்ச்சகர்கள் , பூசாரிகளுக்கு காெரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் நாசர் தலைமை வகித்தார். பாபநாசம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தாமரைசெல்வன் , அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ், அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பாபநாசம் தாலுகாவில் நிலையான சம்பளம் இன்றி பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு ரூ 4 ஆயிரம் , 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன் , அய்யம்பேட்டை பேரூர் செயலாளர் துளசி அய்யா , பாபநாசம் நகர தலைவர் துரை , நகர பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி , கோயில் ஆய்வாளர் குணசுந்தரி, கோயில் எழுத்தர்கள் கோபாலகிருஷ்ணன், முருகு பாண்டியன் , சங்கரமூர்த்தி முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் சீனிவாசன் , சேகர் , அறிவழகன், மாவட்ட கலை இலக்கிய பிரிவு துணை அமைப்பாளர் பிரகாஷ், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மைக்கேல் ராஜ் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News