கும்பகோணத்தில் ஜோஸ் ஆலுக்காஸின் புதிய ஷோரூம் திறப்பு விழா
கும்பகோணத்தில் ஜோஸ் ஆலுக்காஸின் புதிய ஷோரூம் திறப்பு விழா;
தமிழ்நாட்டில் பிரபல ஜுவல்லரி குழுமமான ஜோஸ் ஆலுக்காஸின் பிரம்மாண்டமான புதிய ஷோரூம் கும்பகோணத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய ஷோரூமை, கும்பகோணம் மாநகராட்சி உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, இதயா மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் இயூஜின் அமலா, சன் இனிப்பகம் தமிழ்மாறன், எஸ்.ஜே. ஃபேஷன்ஸ் நிறுவனத்தின் ஜாஃபர் சாதிக் ஆகியோர் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தனர். தொலைக்காட்சித் தொடர் பிரபலங்களான பாப்ரி கோஷ், ஹென்சா, ஹாரிகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களான வர்கீஸ் ஆலுக்கா, பால் ஜெ.ஆலுக்கா மற்றும் ஜான் ஆலுக்கா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
திறப்பு விழாவுக்குப் பிறகு பேசிய ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள், ஷோரூமில் பிஐஎஸ் சான்றளித்த 916 தங்க நகைகள் மற்றும் சர்வதேச லேப் சான்றளித்த வைர நகைகள், புத்தம் புதிய நவீன டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றும், கூடுதல் சலுகைகளாக, ரூ.35,000-க்கு தங்க நகை வாங்கும் அனைவருக்கும் ஒரு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும். அத்துடன், வாடிக்கையாளர்கள் தங்களது பழைய 22 காரட் தங்க நகைகளை கொடுத்து, புதிய தங்க நகைகளையும், IG| சான்றளித்த வைர நகைகளையும், அன்றைய தங்கத்தின் விலைக்கே எந்தவித நஷ்டம் இல்லாமல் வாங்கிக்கொள்ளலாம். இவை தவிர, ஒவ்வொரு விற்பனைக்கும் இலவசப் பரிசுடன், வைர நகைகளின் மீது 20% பிளாட்டினம் நகைகளின் மீது 7% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. நகைகளை திரும்ப வாங்கிக்கொள்ளும் உத்தரவாதத்துடன், வாங்கும் நகைகளின் மீது மிகக் குறைந்த சேதாரம் என்ற பலனும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். சிறப்புச் சலுகையாக, திருமணத்துக்கான நகைகளின் மீது கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் மாதாந்திர தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் சேரவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றனர். இவ்விழா ஏற்பாட்டினை மக்கள் தொடர்பு அலுவலர் அஷ்ரஃப் அலி செய்திருந்தார்.