பெருந்தொற்றால் கணவன்- மனைவி பலி : இறப்பிலும் இணைபிரியாத தம்பதி

கும்பகோணம் அருகே, ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர், அவரது மனைவி இருவரும் கொரோனா தொற்றால் பலியாகினர். இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் மறைவு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.;

Update: 2021-06-25 02:49 GMT

இறப்பிலும் இணைபிரியாத மாரிமுத்து - இந்திராணி தம்பதி

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டு கருப்பூர்,  கீழத்தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (72). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி இந்திராணி (65). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு,  மாரிமுத்து மற்றும் இந்திராணி இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில், இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து,  இருவரும் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மாரிமுத்து இறந்தார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அவரது மனைவி இந்திராணி நேற்று காலையில் உயிரிழந்தார். இருவரது உடல்களும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தஞ்சாவூரில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா தொற்று ஏற்பட்டு தம்பதிகள் சாவிலும் இணைபிரியாமல் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம்,  கும்பகோணம் பகுதியில் நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News