அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - I,II & III மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய நாட்டு நலப்பணி திட்ட ஏழு நாட்கள் சிறப்பு முகாமை நடத்தின. இதில்4 -ஆம் நாள், விளந்தகண்டம் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் விளந்தகண்டம் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி உலகநாதன் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். மதியம் மாணவ மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சியளிக்கப்பட்டது. இதில் தற்காப்பு கலை பயிற்சியாளர் மயிலாடுதுறை கணேசன் தற்காப்புக்களை பற்றி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் வெங்கடேசன் வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியை சரண்யா நன்றி கூறினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் சோமசுந்தரம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் 100 -க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.