கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் வளாகத்தில் வேதியியல் துறை சார்பாக கவுன்சில் ஆப் சயின்டிபிக் மற்றும் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் ஒத்துழைப்புடன் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் கெமிக்கல், என்விரான்மென்ட், எனர்ஜி மற்றும் இன்ஜினியரிங் ரிசர்ச் என்ற தலைப்பில் நடைபெற்றது.
கருத்தரங்கில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை பல்வேறு கல்லூரியைச் சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் சமர்ப்பித்தனர்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன், துணை முதல்வர் முனைவர் கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் முனைவர் ருக்மாங்கதன் ஆகியோர் கொண்டனர். கருத்தரங்க ஏற்பாடுகளை வேதியியல் துறை பேராசிரியர்கள் பரிமளா மற்றும் கார்த்திகேயன் செய்திருந்தனர்.