கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.

Update: 2021-12-22 11:15 GMT

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.

கும்பகோணம் தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் தலைமையில் நடைப்பெற்றது.

இம்முகாமில் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கண், காது, மூக்கு, எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட சிறப்பு டாக்டர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து குறைபாடு சதவீதத்தினை ஆய்வு செய்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு குறைபாடுகள் கண்டறிந்து அதன் அடிப்படையில் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் புதிதாக விண்ணப்பம் படிவம் பூர்த்தி செய்து அடையாள அட்டை  பெற்றுக் கொண்டனர். முகாம் செயல்பாடுகளை ஆர்டிஓ லதா,  தாசில்தார் பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News