திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி நடைபெற்றது.;

Update: 2021-12-13 00:30 GMT
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி
  • whatsapp icon

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி ஆலயம்,  நவகிரகங்களின் ராகுவுக்கான பரிகார தலமாக விளங்குகிறது. தொன்மையான இவ்வாலயத்தில்,  முக்கிய திருவிழாவாக கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா விளங்குகிறது.

பிரம்மன் கார்த்திகை மாதம் திருவிழா எடுத்து கடைசி ஞாயிறன்று தீர்த்தமாடி,  பேறு பெற்றதாக இத்தலபுராணம் கூறுகிறது. இதனை போற்றும் வகையில்,  ஒவ்வொரு ஆணடும் கார்த்திகை கடை ஞாயிறு அன்று இவ்வாலயத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கொரானா விதிமுறைகளின்படி,  ஒருசிலர் மட்டுமே கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்வின் போது அனுமதிக்கப்பட்டனர். தீர்த்தவாரி நிகழ்வை முன்னிட்டு நாகநாதர், கிரிகுஜாம்பிகை, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என ஐம்பெரும் கடவுளர்கள் திருக்குளத்தின் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். திருக்குளத்தில் அஸ்திரதேவருக்கு மஞ்சள், பால், திரவியப்பொடி, சந்தனம், பஞ்சாமிர்தம் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

Tags:    

Similar News