சுவாமிமலை பேரூராட்சியில் உணவு பொருட்கள் 'வேட்டை': குரங்கார் 'சேட்டை'

சுவாமிமலை பேரூராட்சி பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.;

Update: 2022-02-17 01:00 GMT

சுவாமிமலை பேரூராட்சி பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம், நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. சுவாமிமலை சின்னக்கடை தெரு, பெரிய கடைத்தெரு, சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோவில் வளாகம் ஆகியவற்றில் சுமார் 25க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிகின்றனர். இவை, கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் உள்ள பொருட்களை பிடுங்கி அச்சத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் சின்னக்கடை தெரு, பெரிய கடைத்தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளின் உள்ளே புகுந்து வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து சென்று விடுகின்றது.

வீட்டின் மேல் மாடி பகுதிக்கு வந்து, ஹாயாக  அமர்ந்து அங்கு காயவைத்து உள்ள துணிகள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்துகின்றன. மாடியில் காய வைத்துள்ள உணவு பொருட்களை வேட்டையாடுகின்றன. இதனால், பொதுமக்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். எனவே சுற்றித்திரியும் குரங்குகளை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News