கும்பகோணம் மாநகர் அம்மா பேரவை சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

கும்பகோணம் மாநகர் அம்மா பேரவை சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;

Update: 2021-12-24 19:45 GMT

கும்பகோணத்தில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கும்பகோணம் அதிமுக மாநகர் அம்மா பேரவை சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மாநகர அம்மா பேரவை செயலாளர் அயூப் கான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகர் அம்மா பேரவை இணைச் செயலர் ஜான் அன்பு, சோழபுரம் ஆசாத் அலி ரத்னா, ரவி, சரவணன், ரத்தனா, ராஜேந்திரன், விஜி, நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News