கும்பகோணத்தில் எம்ஜிஆரின் நினைவு தினம்- அதிமுகவினர் மரியாதை

கும்பகோணத்தில் எம்ஜிஆரின் நினைவு நாளை ஒட்டி, அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;

Update: 2021-12-24 23:00 GMT

கும்பகோணத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி,  தஞ்சை சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆரின் உருவ சிலைக்கு கும்பகோணம் நகர செயலாளர் ராமநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் கும்பகோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், மேற்கு ஒன்றிய செயலாளர் என்.ஆர்.வி.எஸ். செந்தில் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News