திருநாகேஸ்வரத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2021-12-24 23:45 GMT

தஞ்சை மாவட்டம், திருநாகேஸ்வரம் பேரூர் கழக அஇஅதிமுக சார்பாக,  மறைந்த தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதை முன்னிட்டு கடைவீதியில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு,  நகர செயலாளர் வைரவேல் முன்னிலையில்,   தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் தவமணி மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்துகினார்.

உடன் மாவட்ட பிரதிநிதி வேப்பிலை செல்வராஜ், முன்னாள் நகர செயலாளர் சிங்காரவேல், நகர பொருளாளர் சிவசங்கர், சீனிவாச நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கலியபெருமாள் மற்றும் வார்டு கழக செயலாளர்கள், கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News