கும்பகோணம் சமையல் கலைஞர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மருத்துவ முகாம்

முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது;

Update: 2022-01-06 09:00 GMT

கும்பகோணம் சமையல் கலைஞர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்

கும்பகோணம் சமையல் கலைஞர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இரண்டாம் ஆண்டு பொது மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ முகாம், தலைவர் கொட்டையூர் ரவி (எ) கீர்த்திவாசன் தலைமையில் நடைபெற்றது. முகாமை பெட்டிகடை மணி ஐயர், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், கொட்டையூர் சீனிவாசன், கும்பகோணம் சேதுராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

சங்கத்தின் செயலாளர் சுரேஷ், துணைத் தலைவர் சுரேஷ், பொருளாளர் அபிஷேக் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மாரியப்பன், சங்க ஆடிட்டர் சிவகுரு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் இளையராஜா, ராஜீ, ராஜகோபாலன், ஐஸ் ரமேஷ், ரெங்கராஜன், ஹரிகிருஷ்ணன், குணசேகரன், சௌந்தர்ராஜன், ரமேஷ்குமார், மாப்பிள்ளை சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. தேவனாஞ்சேரி ஊராட்சி மன்ற உறுப்பினரும் சங்கத்தின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினருமான குணசேகரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News