கும்பகோண பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பஸ் இயக்கம்
கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் புதுத்தெரு, சன்னாபுரம் வழியாக ஆடுதுறை சென்று வர பேருந்து போக்குவரத்து வசதி துவக்கம்.;
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, திருநாகேஸ்வரம் பேரூராட்சியில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கும்பகோணத்திலிருந்து - திருநாகேஸ்வரம் புதுத்தெரு, சன்னாபுரம் வழியாக ஆடுதுறை சென்று வர பேருந்து போக்குவரத்து வசதியினை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் தொடங்கி வைத்தார். நிகழ்வில், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி கரிகாலன், பேரூர் திமுக செயலாளர் தாமரைச்செல்வன் மற்றும் திருநாகேஸ்வரம் பேரூர் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.